பெற்றோர்களை இழந்த மாணவிக்கு மஞ்சள் நீராட்டு விழா உட்பட அனைத்து செலவுகளையும் ஏற்று ஒரு தந்தையாக தலைமையாசிரியர் செய்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதற்கிணங்க கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியரான சாமித்துரை கலைச்செல்வி என்ற மாணவிக்கு தாய், தந்தையாக இருந்து செய்த செயல் அனைவரிடமும் பாராட்டுகளை பெற்றுள்ளது . கடந்த 2010ம் ஆண்டு அசகளத்தூர் பகுதியை சேர்ந்த பச்சையம்மாள் என்பவர் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது பெண்மணி ஒருவர் பெண்குழந்தை ஒன்றை ஒப்படைத்து கழிவறைக்கு சென்று வருவதாக கூறி அங்கிருந்து சென்றுள்ளார்.
வெகு நேரமாகியும் அடையாளம் தெரியாத அந்த பெண் வராததால் அவரை தேடி பச்சையம்மாள் அலைய அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது அவரது அருகில் வளையல் விற்றுக் கொண்டிருந்த பெண்மணி உங்களுக்கு குழந்தை இல்லையே, இந்த குழந்தையை வளர்த்தலாமே என்று கேட்க, உடனே பச்சையம்மாளும் அந்த குழந்தையை வீட்டில் எடுத்து சென்று வளர்த்து வருகிறார். அதனையடுத்து பச்சையம்மாள் மற்றும் அவரது கணவரான கோம்பையன் கலைச்செல்வி என்ற அந்த குழந்தையை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்த்துள்ளனர். ஒருநாள் கலைச்செல்வி சரியாக படிக்காததால் தலைமையாசிரியரான சாமித்துரை பெற்றோரை அழைத்து வரும்படி கூற, கலைச்செல்வியின் வளர்ப்பு பெற்றோர்கள் பள்ளிக்கு வருகை தந்து உண்மை அனைத்தையும் கூறி நாங்கள் நோயாளி என்பதால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்றும், எனது மகளை நன்றாக பார்த்து கொள்ளுங்கள் என்றும் தலைமையாசிரியரிடம் கூறி கண்ணீருடன் கூறியுள்ளனர்.
அதனையடுத்து கலைச்செல்வியை அவரும், மற்ற ஆசிரியர்களும் மற்ற பிள்ளைகளை போல கவனித்து வர ஐந்தாம் வகுப்பு முடித்து விட்டு, ஆறாம் வகுப்பிற்காக அருகிலுள்ள அரசு பள்ளியில் சேர்ந்து படித்து வந்துள்ளார். அப்போதும் சாமித்துரை கலைச்செல்விக்கு ஒரு தாயாக இருந்து அனைத்து உதவிகளையும் செய்தார். இந்நிலையில் இவர் 10 வகுப்பை முடிக்க பூப்பெய்துகின்றார். அதனை தலைமையாசிரியரான சாமித்துரைக்கு அறிவிக்க அவரும் அனைத்து செலவுகளையும் ஏற்று தந்தையாக நின்று அனைத்து உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் முன்னிலையில் கலைச்செல்வியின் ஆசைப்படி மஞ்சள் நீராட்டு விழாவையும் சிறப்புற நடத்தியுள்ளார். அது மட்டுமின்றி அவர் பயின்ற பள்ளியில் இருந்து மேளதாளங்களுடன் உறவினர்களை அழைத்து சீர்வரிசையும் செய்துள்ளார். இதனை கண்ட கிராம மக்களை இந்த நிகழ்வு மெய்சிலிர்க்க வைத்ததோடு, ஆசிரியர் தினமான நேற்று நடந்த இந்நிகழ்வால் தலைமையாசிரியர் சாமித்துரையை பலர் மகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளனர்
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…
டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…
கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை…