ஜெயலலிதா வாழ்க்கை குறித்த தலைவி படம் சிறப்பாக உள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. இப்படம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் மற்றும் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர்.
இப்படம் திரையரங்கில் வெளியாகி உள்ள நிலையில், இப்படம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் பேசுகையில் தலைவி படத்தைப் பொருத்தவரை சிறப்பாக உள்ளது. இருப்பினும் இப்படத்தில் சில காட்சிகள் மற்றும் நீக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ஜெயலலிதாவின் துணிவு அறிவு விவேகம் போன்ற பன்முக தன்மை காட்டப்பட்டுள்ளது. இப்படத்தில் அதிமுக ஆட்சியில், திமுக கொடுத்த தொல்லைகள், அராஜகங்கள் காட்டப்படவில்லை என்றும் எம்ஜிஆர் கலைஞர் கருணாநிதி இடம் அமைச்சர் பதவி கேட்பது போல உள்ள காட்சி நீக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தலைவர் எம்.ஜி.ஆரை மதிக்காமல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா செயல்பட்டார் என்பது போன்ற சித்தரிப்பு ஏற்க முடியாது, அதனை நீக்க வேண்டும் என்றும், சசிகலாவுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. அவர் வீட்டு வேலைகளை கவனிக்க வந்தவர் படத்தில் அந்த காட்சிகள் சரியாக வந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…