மாணவர்களுக்கு இலவசமாக செல்போன் வாங்கி கொடுத்த தலைமை ஆசிரியர்.
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாணவர் சேர்க்கை தொடங்கியது. பஸ் வசதியில்லாத இக்கிராமத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியை பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் வசித்து வரும் மக்கள் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளதால், தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் முதல் வகுப்பு சேரும் அனைத்து மாணவர்களுக்கும் செல்போன் வாங்கித் தர முடிவு செய்தார். இதன்படி மாணவர் சேர்க்கை தொடங்கிய முதல் நாளில் பள்ளியில் சேர்ந்த 4 மாணவ- மாணவிகளுக்கு செல்போன் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து ஆசிரியர் ஞானராஜ் அவர்கள் கூறுகையில், ‘இந்த பள்ளியில் எந்த வகுப்பிற்கு புதிதாக மாணவர்கள் வந்தாலும் அவர்களுக்கு செல்போன் விலையில்லாமல் வழங்கப்படும். மேலும் 2 கி.மீ. தூரத்தில் உள்ள அண்ணாநகரில் இருந்து படிக்க வரும் மாணவ- மாணவிகள் வந்து செல்ல சொந்த செலவில் ஆட்டோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : சண்டிகர் மாநிலத்தில் இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட 5வது ஐபிஎஸ் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில்…
சென்னை : ஃபெஞ்சல் புயலின் தாக்கம் தற்போது தான் வடதமிழக மாவட்டங்களில் சற்று மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இன்னும்…
ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களான நாக சைதன்யா - நடிகை சோபிதாவின் திருமணம் இன்று பிரமாண்டமாக நடந்து முடிந்தது.…
புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் பெருமழை பாதிப்பில் சிக்கிய புதுச்சேரியில் அதிகம் பாதிக்கப்பட்ட கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர் உள்ளிட்ட இடங்களில்…
கடலூர்: பெஞ்சல் புயல் கனமழை காரணமாக வட தமிழக மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் இன்னும் வெள்ள…
சென்னை: வடசென்னை உயர்கல்வித்துறை சார்பில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில், ரூ.1,383 கோடி மதிப்பீட்டில் 79 புதிய திட்டப் பணிகளை…