ராக்கெட் வெடி தீப்பொறியால் பற்றி எறிந்த ஹார்டுவேர் கடை..! பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்..!
ராக்கெட் வெடி தீப்பொறியால் பற்றி எறிந்த ஹார்டுவேர் கடை.
இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், மக்கள் அனைவரும் வெடி வெடித்து மிகவும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், தீபவளியை மிகவும் பாதுகாப்பான முறையில் கொண்டாடுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில், சென்னை கீழ்கட்டளையில் ஹார்டுவேர் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ராக்கெட் வெடி வெடித்த போது அதிலிருந்து தீப்பொறி பட்டு, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பைப்புகள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.