இனி நான் அடிக்கிற ஆள் எல்லாம் எதிரிதான் – கமல்ஹாசன்

Default Image

எங்கள் கூட்டணிக்கு யாரு வந்தாலும் அரவணைக்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன், ச.ம.க. தலைவர் சரத்குமார் மற்றும் ஐஜேகே. ரவிபச்சமுத்து ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது பேசியா கமல்ஹாசன், எங்கள் கூட்டணிக்கு யாரு வந்தாலும் அரவணைக்கப்படும். இது மக்களுக்காக வந்திருக்கிற முதல் அணி, முன் அணி, அனைவரையும் நண்பர்களாக பாவித்து அரவணைப்போம் என கூறியுள்ளார்.

தேமுதிகவிற்கு கட்சியின் துணை தலைவர் பொன்ராஜ் அழைப்பு விடுத்திருந்ததை செய்தியில் பார்த்தேன் என்றும் அவர்கள் பேசி முடிவு எடுத்துவிட்டு தெரிவிப்பார்கள் என கூறியுள்ளார். திமுக தலைவர் மு க.ஸ்டாலின் மீது விமர்சனம் செய்தாலும், தப்பு செய்யவில்லை என்றாலும் தப்பு என்று சொன்னால் நான் என்ன செய்வேன் என முக ஸ்டாலின் மீது விமர்சனம் செய்ததை குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

எனக்கு இவர், அவர் எதிரி, மக்களுக்கு எதிரி இவர்கள் என்பதை முடிவு செய்து விட்டதும் எல்லாரையும் போட்டு மிதிக்க வேண்டியது தான் என கூறியுள்ளார். இனி நான் அடிக்கிற ஆள் எல்லாம் எதிரி தான், அவர்களுக்கு யாரை அடிக்க வேண்டும் என்பது அவர்களுக்கே தெரியாது என ப்ரூஸ்லீ கதையை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

நான் இனி போக வேண்டியது சுற்றிச்சுற்றி அடிக்க வேண்டியது தான், தென்பட்ட இடமெல்லாம் அடிக்க வேண்டியது தான். அதைத்தான் செய்துகொண்டு இருக்கிறேன். அப்போது, அவர்கள் பெயர்கள் அப்படியே வரும் என ஸ்டாலின் உள்ளிட்ட எல்லார் மீதும் விமர்சனம் வைப்பேன் என தெரிவித்துள்ளார்.

இங்கு அதிமுக – திமுக ஆகிய இரு கட்சிகளும் அகற்றப்பட வேண்டியவர்கள், ஆகையால் அவர்களை பற்றி பேசாமல் இருக்க முடியாது, தனிப்பட்ட முறையில் பேச வேண்டாம். ஆனால், அவர்கள் செய்ததற்கான தண்டனையை தேடிக்கொள்வார்கள், இல்லையென்றால் நாங்கள் கையில் கொடுப்போம் என விமர்சித்துள்ளார். மேலும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை காலை 9 மணியளவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்