வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வெங்களாபுரம் பகுதியை சார்ந்த தனசேகர். இவரது மனைவி ராதா.இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனசேகர் தனது தகுதிக்கு மீறி அதிகமான கடன்களை வாங்கி உள்ளார்.
இதனால் கடனை திருப்பி கொடுக்கமுடியாமல் தவித்து வந்த தனசேகர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு தலைமறைவாகி விட்டார்.
இதனால் தனது இரண்டு குழந்தைகளை கூலி வேலை செய்து காப்பாற்றும் நிலைமை ராதாவிற்கு ஏற்பட்டது.தனது கணவர் தனசேகருக்கு கடன் கொடுத்தவர்கள் அனைவரும் ராதாவிடம் கடனை திருப்பி கேட்டு தினமும் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ராதா கணவன் இல்லாத வீடு என்பதால் தனது கஷ்டத்திலும் ஒரு நாய் ஒன்றை செல்லமாக வளர்ந்து வந்து உள்ளார்.கடன் கொடுத்தவர்கள் ராதாவை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.இதில் மனமுடைந்த ராதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருப்பத்தூர் ரூரல் காவல் துறையினர் ராதாவின் உடலை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க உடலை எடுக்க முயற்சி செய்தனர். அப்போது ராதா செல்லமாக வளர்ந்து வந்த நாய் ராதாவின் உடலை எடுக்க விடாமல் ராதாவின் அருகிலே உட்காந்து கொண்டது.
தாலிகட்டி கணவன் கடனுக்காக ஓடிவிட்டார்.உறவினர்கள் யாரும் ஆறுதலுக்காக கூட கேட்க வரவில்லை. இந்நிலையில் தன் எஜமான் மீது கொண்ட பாசத்தால் அந்த நாய் ராதாவை தொடவும் , நெருக்கவிடாமலும் சுற்றி சுற்றி ராதாவை வந்தது. இதை பார்த்தவர்களின் கண்களில் கண்ணீர் வரவைத்தது.
சிறிது நேரம் கழிந்து காவல்துறை கேட்டுக்கொண்டதற்கு இணங்க ராதாவின் மகள் சங்கிலியால் அந்த நாய்யை கட்டி இழுத்து சென்றார்.உடலை கைப்பற்றிய போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
தாய் , தந்தை இருவரையும் இழந்து தற்போது அனாதையாக உள்ள அந்த இரண்டு குழந்தைகளுக்கு காவலாளியாக உள்ளது அந்த நன்றி உள்ள ஜீவன்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…