புதிவண்ணாரபேட்டை காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்து வந்தவர் நரேஷ். இவர் புழல் பகுதியில் வசித்து வந்து உள்ளார்.இவரது மனைவி ஜெயாஸ்ரீ. கடந்த 7 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வருண் என்ற மகன் உள்ளார்.
இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை வந்ததாக கூறப்படுகிறது.சில நாள்களுக்கு முன் ஜெயாஸ்ரீ கோபித்து கொண்டு பெரம்பூரில் உள்ள தனது சகோதரர் சரவணன் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதை தொடர்ந்து சரவணன் வீட்டிற்கு அங்கு சென்ற நரேஷ் தனது மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்க்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. வீட்டிற்க்கு வந்த பிறகு நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தபோது ஜெயாஸ்ரீ வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தார்.
காவலர் நரேஷ் தூக்கில் தொங்கியபடி இறந்து உள்ளார். உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : 2024 சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12, முதல் டிசம்பர் 19, வரை சென்னையில் நடைபெற்றது. தமிழக…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
டெல்லி : நாகாலாந்து பாஜக பெண் எம்பி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் அருகே…
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…