பிரபஞ்ச உணர்வுகளைத் தொட்ட மகத்தான படைப்பாளி நம்மை நீங்கினார்- கமல் இரங்கல்..!

கரிசல் என்னும் வட்டாரத்தை எழுதி பிரபஞ்ச உணர்வுகளைத் தொட்ட மகத்தான படைப்பாளி கி.ராஜநாராயணன் நம்மை நீங்கினார் என கமல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் கிராமத்தை சார்ந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் கரிசல் இலக்கியத்தின் தந்தை என போற்றப்படுபவர். ‘கோபல்லபுரத்து கிராமம்’ நாவலுக்காக இவருக்கு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று நள்ளிரவு கி.ராஜநாராயணன் காலமானார். இவரின் மறைவிற்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கரிசல் என்னும் வட்டாரத்தை எழுதி பிரபஞ்ச உணர்வுகளைத் தொட்ட மகத்தான படைப்பாளி கி.ராஜநாராயணன் நம்மை நீங்கினார். அவருக்குப் புகழஞ்சலி என பதிவிட்டுள்ளார்.
கரிசல் என்னும் வட்டாரத்தை எழுதி பிரபஞ்ச உணர்வுகளைத் தொட்ட மகத்தான படைப்பாளி கி.ராஜநாராயணன் நம்மை நீங்கினார். அவருக்குப் புகழஞ்சலி.
— Kamal Haasan (@ikamalhaasan) May 18, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025