ஆளுநரின் பேச்சு போராடியவர்களின் நெஞ்சில் ஈட்டியைப் பாச்சுகிறது- வைகோ.!
ஆளுநரின் இந்த சர்ச்சைப்பேச்சு ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியவர்கள் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சுவதாக வைகோ கூறியுள்ளார்.
ஆளுநர் ரவி பேச்சு: சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில், குடிமைப்பணி தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுடன், தமிழக ஆளுநர் ரவி இன்று கலந்துரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் ஸ்டெர்லைட் போராட்டம் மக்களை தூண்டிவிட்டு நடத்தப்பட்டது எனவும், நாட்டின் தேவையை நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மக்களை தூண்டி விட்டு மூடிவிட்டனர் எனவும் கூறினார்.
கண்டனம்: மேலும் ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட 20க்கும் மேற்பட்ட மசோதாக்கள் கிடப்பில் இருப்பதை சுட்டிக்காட்டி கூறிய ஆளுநர், அவை நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம் என்று கூறினார். ஆளுநரின் இந்த பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து கூறிய ஆளுநர், வெளிநாட்டு நிதி உதவிகள் மூலம் இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பதற்கு இந்த போராட்டம் நடந்துள்ளதாக தெரிவித்திருந்தார். ஆளுநரின் இந்த கருத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈட்டியைப் பாய்ச்சுகிறது: வெளிநாட்டிலிருந்து பணம் வாங்கிக்கொண்டு போராட்டம் நடத்தினார்கள் என ஆளுநர்கள் கூறுவது, உயிரிழந்தவர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் போராட்டத்தை கொச்சை படுத்துவது போல் இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என, அந்த ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது ஈட்டியைப் பாய்ச்சுவது போல ஆளுநரின் இந்த பேச்சு இருக்கிறது என வைகோ கூறியுள்ளார்.