வரும் 7-ம் தேதி முதல் ஆளுநர் மாளிகை முன்பு காலவரையற்ற உண்ணாவிரதம்…! வேல்முருகன்
வரும் 7-ம் தேதி முதல் ஆளுநர் மாளிகை முன்பு காலவரையற்ற உண்ணாவிரதம் நடைபெறும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறுகையில், மத்திய அரசு கர்நாடகாவை ஒரு மாதிரியும், தமிழகத்தை வேறு மாதிரியும் பார்ப்பது ஏற்புடையதல்ல. மேகதாது விவகாரத்தில் சரியான முடிவு எடுக்கவில்லை என்றால் வரிசெலுத்த வேண்டாம் என போராடுவோம்.பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வரும் 7-ம் தேதி முதல் ஆளுநர் மாளிகை முன்பு காலவரையற்ற உண்ணாவிரதம் நடைபெறும் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.