சட்டப்பேரவை தொடங்கி 3 நிமிடத்திலேயே வெளியேறிய ஆளுநர்.. காரணம் என்ன? ஆளுநர் மாளிகை விளக்கம்.!

2025ஆம் ஆண்டின் முதல் சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. உரை நிகழ்த்த சட்டப் பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என் ரவி சில நிமிடங்களில் அங்கிருந்து வெளியேறினார்.

TN Assembly - RN Ravi

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் ஆளுநர் பேரவையில் உரையாற்றுவார். அரசின் சாதனைகளைப் பேசி, இந்த ஆண்டுக்கான திட்டங்களை அவர் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இன்று காலை 9.30 ஆளுநர் உரையுடன் தொடங்கவிருந்த நிலையில், சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய 3 நிமிடத்தில் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்ட சென்றார். சட்டப்பேரவையில் உரையின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கவில்லை என கடந்த ஆண்டு தனது உரையை வாசிக்காமல் இருந்த ஆளுநர் ரவி, இம்முறை அதே காரணத்தைக் கூறி அவையில் இருந்தே வெளியேறினார்.

இந்த நிலையில், ஆளுநர் உரையை வாசிக்கும் சபாநாயகர் உரையை வாசிக்காமல் ஆளுநர் வெளியேறியதால் அதனை சபாநாயகர் தானே வாசித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் முதல் கூட்டத்தொடரில் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை ஆளுநர் உரையாக வாசிப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டும் ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறியதால் சபாநாயகர் அதனை தமிழில் வாசித்து வருகிறார்.

இதனிடையே, பேரவையில் இருந்து வெளியே வந்த செல்வப்பெருந்தகை, ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்ததாகக் கூறினார். நீட்டிற்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுவதாகவும், தமிழகத்திற்கு எதிராக உள்ளதாகவும் குற்றஞ்சாட்டிய, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ச் அணிந்து வந்ததாகவும் கூறினார்.

ராஜ் பவன் விளக்கம்

சட்டப்பேரவையில் உரையை தொடங்குவதற்கு முன்னரும், பின்னரும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று ஆளுநர் மாளிகை கூறியுள்ளது. நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு முன்னும் பின்னும் தேசிய கீதம் இசைக்கப்படும் என்றும், தமிழக சட்டப்பேரவையில் மட்டும் இந்த முறை கடைபிடிக்கப்படுவதில்லை என்றும் ராஜ்பவன் குற்றம்சாட்டியுள்ளது. இது தேசிய கீதத்துக்கு அவமானம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2வது முறையாக வெளியேறிய ஆளுநர்

2வது ஆண்டாக ஆளுநர் ரவியை சட்டப்பேரவையில் இருந்து உரையை வாசிக்காமல் வெளியேறியுள்ளார். முதலில் தேசிய கீதம் பாடவேண்டும் என கடந்த ஆண்டே சபாநாயகருக்கு ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார். எனினும், இன்றும் முதலில் தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டதால், அவர் அவையில் இருந்து உடனடியாக வெளியேறினார். கடந்தாண்டும் 3 நிமிடத்தில் அவர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

எப்போது தேசிய கீதம் இசைக்கப்படும்?

தமிழ்நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு அரசு நிகழ்ச்சியிலும் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், முடிவில் தேசிய கீதமும் இசைக்கப்படும் என்று மாநில அரசு அரசாணையே வெளியிட்டிருக்கிறது. ஆனால், பேரவையின் தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்தியிருக்கிறார். அதனை சபாநாயகரும் முதல்வரும் ஏற்காததால் ஆளுநர் வெளியேறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்