தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்காக உள்துறை அமைச்சகத்தின் மூலம் குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளார் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றசாட்டியுள்ளார். சென்னையில் செய்தியார் சந்திப்பில் பேசிய அமைச்சர், ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதற்காகவே மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்புகிறார் ஆளுநர்.
தன்னிடம் இருக்கும் அதிகாரம் பறிபோய் விடக்கூடாது என்ற எண்ணத்தில் ஆளுநர் செயல்படுகிறார். துணைவேந்தரை நியமிக்கக்கூட மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கக்கூடாது என நினைப்பது எந்த வகையில் நியாயமாக இருக்கும். மக்கள் உரிமை பறிக்கப்படாமல் ஜனநாயகத்தை காப்பதற்காகவே மசோதாக்களை மீண்டும் பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திமுக இளைஞரணி மாநாடு… கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு!
10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியதால் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்டி இரண்டாவது முறையாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்த 10 சட்ட மசோதாக்களை குடியரசு தலைவருக்கு ஆளுநர் ரவி அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பியதால் சட்டப்படி ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக வேண்டும்.
இந்த சூழலில் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்காக உள்துறை அமைச்சகம் மூலம்கூடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். இது இழுத்தடிப்பதற்கான முயற்சி. ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில், 10 மசோதாக்களை உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார்.
மேலும், மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் 3 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு கேள்வி எழுப்பியிருந்தது. எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் நிர்வாகத்தை தன கையில் எடுக்க ஆளுநர் முயற்சிப்பதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…