மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதற்காகவே ஆளுநர் முயற்சி.. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

minister ragupathy

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்காக உள்துறை அமைச்சகத்தின் மூலம் குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளார் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றசாட்டியுள்ளார். சென்னையில் செய்தியார் சந்திப்பில் பேசிய அமைச்சர், ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதற்காகவே மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்புகிறார் ஆளுநர்.

தன்னிடம் இருக்கும் அதிகாரம் பறிபோய் விடக்கூடாது என்ற எண்ணத்தில் ஆளுநர் செயல்படுகிறார். துணைவேந்தரை நியமிக்கக்கூட மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கக்கூடாது என நினைப்பது எந்த வகையில் நியாயமாக இருக்கும். மக்கள் உரிமை பறிக்கப்படாமல் ஜனநாயகத்தை காப்பதற்காகவே மசோதாக்களை மீண்டும் பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

திமுக இளைஞரணி மாநாடு… கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு!

10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியதால் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்டி இரண்டாவது  முறையாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்த 10 சட்ட மசோதாக்களை குடியரசு தலைவருக்கு ஆளுநர் ரவி அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பியதால் சட்டப்படி ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக வேண்டும்.

இந்த சூழலில் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்காக உள்துறை அமைச்சகம் மூலம்கூடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். இது இழுத்தடிப்பதற்கான முயற்சி. ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில், 10 மசோதாக்களை உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார்.

மேலும், மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் 3 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு கேள்வி எழுப்பியிருந்தது. எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் நிர்வாகத்தை தன கையில் எடுக்க ஆளுநர் முயற்சிப்பதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்