ஆளுநர் தனது வேலையை மட்டும் பார்க்க வேண்டும் – சீமான்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆளுநர் தனது வேலையை மட்டும் பார்த்தால் இதுபோன்ற பிரச்னைகள் உருவாகியிருக்காது. விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாற்றை ஆட்சியாளர்கள் மறைக்கிறார்கள் என்பதை நான் ஆமோதிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
ஆனால், விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாற்றை ஆட்சியாளர்கள் மறைக்கிறார்கள் என்பதை சொல்ல தகுதி மற்றும் நேர்மை ஆளுநருக்கு இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார். வல்லபாய் படேலுக்கு சிலை வைத்துள்ளார். அதே வ.உ.சி-க்கு சிலை வைத்திருக்கிறாரகளா? வ.உ.சி-யை விட பெரிய ஆளா வல்லபாய் படேல்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆளுநர் மாளிகை பெட்ரோல் பாட்டில் வீச்சு.. மயிலாடுதுறை சம்பவம்.! தமிழக காவல்துறை விளக்கம்.!
நீட் தேர்வை நடத்து செய்ய கையெழுத்து இயக்கத்தை திமுக நடத்துவது, தேர்தலில் நடத்தப்படும் நாடகம். அது ஒவ்வொரு நடப்பது தான். நீட்டை கொண்டுவந்ததே காங்கிரசும், திமுகவும் தான். ஆர்.எஸ்.எஸ் ஒரு கோட்பாட்டை வைத்துள்ளது. அதில் ஒன்று தான் ஒரே கல்வி கொள்கை, ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற அறிவிப்பு.
வாத்தியார் தேர்வு எழுதியவர்கள் தெருவில் நிற்கிறார்கள். இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம் என அறிவிக்கிறார்கள். அதற்கு பதிலாக இல்லம் தேடி மது, இல்லம் தேடி டாஸ்மாக் என அறிவிக்கலாமே என விமர்சித்துள்ளார்.