7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவு எடுக்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை
7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழக அரசு இயற்றியது. இதனிடையே மருத்துவ இடங்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ,
7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்தது.மேலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.