துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பாக தவறு செய்தது யார் என்பதை ஆளுநர் அறிவிக்க வேண்டும்…! தமாகா தலைவர் ஜி.கே.வாசன்
துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பாக தவறு செய்தது யார் என்பதை ஆளுநர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
கல்வித்துறையில் துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நிறைந்துள்ளதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்தார். அக்டோபர் 5 அம தேதி சென்னை திநகரில் உயர் கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று பேசினார்.அப்போது தமிழக ஆளுநர் பேசும் போது , தமிழகத்தில் உயர்கல்வித்துறை துணைவேந்தர் நியமனத்தில் கோடிக்கணக்கில் பணம் புரண்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள ஊழலை கண்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன்.இதை மாற்ற வேண்டுமென நினைத்தேன் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் , தகுதிகள் அடிப்படையில் தான் துணை வேந்தரை நியமிக்க வேண்டும் என்றும் நான் தகுதிகள் அடிப்படையில் 9 துணை வேந்தர்களை நியமித்துள்ளேன் என்றும் தெரிவித்தார்.இது தமிழக அரசியல் கல்வித்துறையில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது தொடர்பாக தமாகா தலைவர் வாசன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பாக தவறு செய்தது யார் என்பதை ஆளுநர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.அதேபோல் 5 மாநில தேர்தலுடன்,தமிழக இடைத்தேர்தலை அறிவித்திருக்க வேண்டும்.தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு ஏற்க கூடியதாக இல்லை என்றும் தமாகா தலைவர் வாசன் தெரிவித்துள்ளார்.