தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியது ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆளுநருக்கு உச்சநீதிமன்ற கடும் கண்டனம் தெரிவித்து நவ.20ல் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த சூழலில், ஆளுநர் ரவி. மசோதாக்களுக்கு ஒப்புதல் கோரிய வழக்கில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 10க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு மீண்டும் அரசுக்கு திருப்பி அனுப்பினார்.
ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க அரசு முடிவு செய்து,. நாளை சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஆளுநர் நிராகரித்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப அரசு விரும்புவதால் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மசோதாக்களை நிறைவேற்றி அனுப்ப அதிகாரம் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
10 மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர்.. சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை அறிவித்தது தமிழக அரசு!
மேலும், மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால், அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நாளை கூடும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில், ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை நிறைவேற்றி நாளை மாலையே ஆளுநரின் ஒப்புதலுக்கும் அனுப்பிவைக்கப்பட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழலில் திமுக கூட்டணி அல்லாத கட்சிகளின் நிலை என்ன என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக பாஜக, அதிமுக நிலை என்னவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சர் இருப்பதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும், ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் என்ற நிலையில், நாளை நடைபெற உள்ள சிறப்பு கூட்டத்தில் கலந்துகொள்ள பாஜக முடிவு செய்துள்ளது. சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் கலந்துகொண்டு எதிர்ப்பை பதிவுசெய்யவும் பாஜக ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…