விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழக ஆளுநர் அவர்கள், ஆளுநராக செயல்படவில்லை, அவர் பிரதமரின் பிரதிநிதியாக செயல்படுகிறார்.
வெறும் 2-ஆம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் பட்டமளிப்பு விழாவில், சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்க வேண்டும் என தமிழக மக்களின் தரப்பில் நான் வலியுறுத்துகிறேன். இது ஒரு கூட்டாட்சி நாடு, இதனை ஒற்றை ஆட்சியாக பார்ப்பதற்கு பாஜக முயற்சி செய்கிறது.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு.!
பாஜக ஒரே நாடு, ஒரே அரசு என்ற தலைப்பிலே செயல்பாட்டுக்கு கொண்டிருக்கிறார்கள். மாநிலங்களுக்குரிய உரிமைகள் பறிக்கப்படுகிறது. அரசின் முக்கியமான கோப்புகளில் ஆளுநர் கையெழுத்திட மறுக்கிறார் என குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதலே ஆளும் திமுக அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையேயான கருத்து மற்றும் மற்றும் நிர்வாக மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், நேற்று தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு, தமிழக அரசின் உத்தரவுகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து ஒப்புதல் அளிக்காமல் அதனை தாமதப்படுத்தி வருகிறார் என கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…