ஆளுநர் பாஜககாரர்.. ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகம்.! முதல்வர் பரபரப்பு குற்றசாட்டு.!

Tamilnadu CM MK Stalin - Governor RN Ravi

இன்று முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் ராமநாதபுரம் மாட்டம் பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின்  தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், முத்துராமலிங்க தேவரின் நினைவுகளையும், அவருக்காக திமுக செய்த பணிகளையும் பட்டியலிட்டார். அதன் பிறகு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறினார். அப்போது தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்ய படுவது. ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் பாட்டில் வீச்சு ஆகியவற்றை பற்றி பேசினார்.

முத்துராமலிங்க தேவர் நினைவாக திமுக செயல்படுத்திய திட்டங்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.!

மீனவர்கள் சிறைபிடிப்பு பற்றி பேசுகையில், தொடர்ந்து, இலங்கை கடற்படையால், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய அரசு, வெளியுறவு துறை ஆகியவற்றிற்கு கடிதம் எழுதி வருகிறோம்  வெளியுறவு துறை, அண்மையில் கூட ராமநாதபுர மீனவர்கள் சிறைபிடிப்பு குறித்தும் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டி கடிதம் எழுதினேன்  என குறிப்பிட்டார்.

மேலும் , இது தொடர்பாக வெளியுறவு துறை அமைச்சரை நேரில் சென்று சந்திக்க திமுக எம்பி டி.ஆர்.பாலு மற்றும் ராமநாதபுர மாவட்ட மீனவர் சங்க நிர்வாகிகளையும் அழைத்துக்கொண்டு டெல்லி சென்றுள்ளனர் என கூறினார்.

அடுத்து ஆரியம் திராவிடம் என்று ஒன்று இல்லை என ஆளுநர் ரவி கூறிய கருத்து பற்றிய கேள்விக்கு பதில் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்னாருக்கு இன்னார் தான். இன்னாருக்கு இதுதான் என கூறுவது ஆரியம். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என கூறுவது திராவிடம்.  இந்த உண்மையை ஆளுநர் ரவி புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், ஆளுநர் மாளிகை முன்பு நடந்த பெட்ரோல் பாட்டில் வீச்சு சம்பவம் பற்றிய கேள்விக்கு, ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை. அதன் அருகில் தான் பெட்ரோல் பாட்டில் வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதனை காவல்துறை தெளிவாக சிசிடிவி ஆதரங்களோடு வெளிப்படுத்திவிட்டார்கள். ஆளுநர் மாளிகை திட்டமிட்டு பொய் செய்திகளை பரப்புகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி பாஜக கட்சியினராகவே மாறியுள்ளார். ஆளுநர் அலுவலகம் பாஜக அலுவலகமாக மாறிவிட்டது என்றும் தனது விமர்சனத்தை முன்வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS FEB 27
Rohit sharma
vijay yesudas and kj yesudas
lokesh and rajini coolie
Tamilnadu cm mk stalin (3)
Waqf Board - Parliament session
Singer KJ Yesudas