கார்ல் மார்க்சின் கருத்துகளை ஆளுநர் நன்றாக படிக்கவில்லை – டாக்.ராமதாஸ்

Published by
லீனா

கார்ல் மார்க்சின் கருத்துகளை ஆளுநர் நன்றாக படிக்கவில்லை என்பதையே ஆளுநரின் கருத்துகள் காட்டுகின்றன என டாக்.ராமதாஸ் ட்வீட். 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக காரைக்குடியில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் கார்ல் மார்க்சின் கருத்து குறித்து ஆளுநர் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு டாக்.ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருந்தார்.

அந்த பதிவில், ‘செருமானிய தத்துவ அறிஞர் கார்ல் மார்க்சின் கொள்கைகள் இந்தியாவுக்கு எதிரானவை; அவை இந்திய வளர்ச்சிக்கு தடையாக இருந்தன என்று ஆளுநர் ரவி கூறியிருப்பது தவறு, கண்டிக்கத்தக்கது.

கார்ல் மார்க்சு எந்த நாட்டுக்கும் எதிராகச் செயல்படவில்லை; அது அவரது கொள்கையும் அல்ல. கார்ல் மார்க்சின் கருத்துகளை ஆளுநர் நன்றாக படிக்கவில்லை என்பதையே அவரின் கருத்துகள் காட்டுகின்றன!

எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற பொதுவுடைமை தான் கார்ல் மார்க்சின் கொள்கையாகும். அவரின் கொள்கைகளையும், மூலதனம் நூலையும் உலகமே பாராட்டுகிறது. பா.ம.க.வின் கொள்கை வழிகாட்டிகளில் மார்க்சும் ஒருவர்.

கார்ல் மார்க்சு குறித்து முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் ஆளுநர் அவதூறுகளை பரப்பக்கூடாது, அது அவருக்கு வழங்கப்பட்ட பணியும் அல்ல. கார்ல் மார்க்சு குறித்து தவறான தனது விமர்சனத்தை ஆளுநர் திரும்பப்பெற வேண்டும்! என  பதிவிட்டுளளார்.

Published by
லீனா

Recent Posts

304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி! அயர்லாந்தை ‘ஒயிட்வாஷ்’ செய்த இந்தியா!

304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி! அயர்லாந்தை ‘ஒயிட்வாஷ்’ செய்த இந்தியா!

ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…

11 minutes ago

பரபரப்பு!! பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானுக்கு கத்திக்குத்து!

மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…

12 minutes ago

Live: களைகட்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல்… இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் வரை.!

மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…

22 minutes ago

தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… சீறிப்பாயும் காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்கள்.!

மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…

2 hours ago

முடிவுக்கு வரும் போர்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்..!

இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…

2 hours ago

பிரபல ரவுடி பாம் சரவணன் துப்பாக்கி முனையில் கைது.!

சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…

3 hours ago