சூரப்பா விதிகளை மீறி செயல்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது – அமைச்சர் அன்பழகன்

Published by
Venu

சூரப்பா விதிகளை மீறி செயல்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது  என்று அமைச்சர் கே.பி. அன்பழகன்  தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.இது பெரும் சர்ச்சையாக மாறியது.மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் எழுதியதாக சர்ச்சை எழுந்த நிலையில் இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விளக்கமளித்தார்.அதில், அண்ணா பல்கலையின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை ஒப்புதலுடன் அறிக்கை தயாரிக்கப்பட்டது .என்னை போல மற்ற துணை வேந்தர்கள் யாரும் அரசை சந்தித்தது இல்லை. அரசிடம் கேட்டே செயல்படுகிறேன்” எனவும் உயர்நிலை சிறப்புத் அந்தஸ்து கிடைத்தால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு பெரிய அளவில் வருவாய் கிடைக்கும். இந்த நிதியின் மூலம் உள்கட்டமைப்பு, ஆய்வு கட்டமைப்பு வெளிநாட்டு பல்கலைக்கழகம் தொடர்பு போன்ற பல வாய்ப்புகள் ஏற்படும் என தெரிவித்தார். மற்றபடி இந்த உயர்நிலை சிறப்பு தகுதி காரணமாக பல்கலைகழகத்தில் நிர்வாக ரீதியான எந்த மாற்றமும் செய்யபடாது  என துணைவேந்தர் சூரப்பா விளக்கம் கொடுத்தார்.ஆனாலும் சூரப்பா தன்னிச்சையாக கடிதம் எழுதியது தொடர்பாக தமிழக அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்  தர்மபுரியில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,அண்ணா பல்கலைகழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினால் இட ஒதுக்கீடு கிடைக்காது.அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விதிகளை மீறி செயல்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது  என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு முட்டை மசாலா அசத்தலான சுவையில் செய்யும் முறை..!

புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு முட்டை மசாலா அசத்தலான சுவையில் செய்யும் முறை..!

சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…

6 minutes ago

மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச எதுவும் இல்லை! இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!

இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…

12 minutes ago

வன்கொடுமை விவகாரம் : மாணவி புகார் பெறப்பட்டது எப்படி? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…

27 minutes ago

அந்த சார் யார் என்பதை காவல்துறை மறைக்கிறது – திர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…

54 minutes ago

கிண்டல் செய்த ரசிகர்கள்! செம கடுப்பான விராட் கோலி!

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…

2 hours ago

பாலியல் வழக்கு விசாரணை சந்தேகங்களை எழுப்புகிறது! அண்ணாமலை பதிவு!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

2 hours ago