சூரப்பா விதிகளை மீறி செயல்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது – அமைச்சர் அன்பழகன்
சூரப்பா விதிகளை மீறி செயல்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது என்று அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.இது பெரும் சர்ச்சையாக மாறியது.மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் எழுதியதாக சர்ச்சை எழுந்த நிலையில் இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விளக்கமளித்தார்.அதில், அண்ணா பல்கலையின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை ஒப்புதலுடன் அறிக்கை தயாரிக்கப்பட்டது .என்னை போல மற்ற துணை வேந்தர்கள் யாரும் அரசை சந்தித்தது இல்லை. அரசிடம் கேட்டே செயல்படுகிறேன்” எனவும் உயர்நிலை சிறப்புத் அந்தஸ்து கிடைத்தால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு பெரிய அளவில் வருவாய் கிடைக்கும். இந்த நிதியின் மூலம் உள்கட்டமைப்பு, ஆய்வு கட்டமைப்பு வெளிநாட்டு பல்கலைக்கழகம் தொடர்பு போன்ற பல வாய்ப்புகள் ஏற்படும் என தெரிவித்தார். மற்றபடி இந்த உயர்நிலை சிறப்பு தகுதி காரணமாக பல்கலைகழகத்தில் நிர்வாக ரீதியான எந்த மாற்றமும் செய்யபடாது என துணைவேந்தர் சூரப்பா விளக்கம் கொடுத்தார்.ஆனாலும் சூரப்பா தன்னிச்சையாக கடிதம் எழுதியது தொடர்பாக தமிழக அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தர்மபுரியில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,அண்ணா பல்கலைகழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினால் இட ஒதுக்கீடு கிடைக்காது.அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விதிகளை மீறி செயல்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது என்று தெரிவித்துள்ளார்.