மக்களாட்சிக்கு விரோதமாக தனித்து முடிவெடுத்து செயல்படுத்தும் போக்கை தமிழக அரசு கடைபிடிக்காது என்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இன்று சட்டப்பேரவை கூடியுள்ள நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக இன்று சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த வேளாண் இ-பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் வேளாண் வணிகர்களிடம் கருத்து கேட்ட பின்னரே இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு தமிழ்நாட்டின் வேளாண் பட்ஜெட்டை காணிக்கையாக்குகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அனைத்து கிராமங்களும் ஒட்டுமொத்த வளர்ச்சி அடைந்து தன்னிறைவு பெற்றவையாக மாறுவதே இந்த திட்டத்தின் நோக்கம் என்றும், மக்களாட்சிக்கு விரோதமாக தனித்து முடிவெடுத்து செயல்படுத்தும் போக்கை தமிழக அரசு கடைபிடிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…