வழக்கின் தீர்ப்பை அறிந்து அரசு நிச்சயம் மேல் முறையீடு செய்யும் – சி.வி.சண்முகம்!
12 வயது சிறுமியின் பலாத்கார கொலையில், `வழக்கின் தீர்ப்பை அறிந்து அரசு நிச்சயம் மேல் முறையீடு செய்யும் என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பாக கிருபானந்தன் என்பவர் கைது செய்யப்பட்டார். இருப்பினும் தகுந்த ஆதாரம் இல்லை என்பதால் திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய உத்தரவு கொடுத்து விடுதலை செய்தது.
இந்நிலையில், இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள சலுன் கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இது குறித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் அவர்கள், வழக்கின் தீர்ப்பை ஆராய்ந்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் அரசு நிச்சயம் மேல்முறையீடு செய்யும் எனவும் கூறியுள்ளார்.