மழையிலும் வெயிலிலும் மக்களுக்குக் குடையாகக் கழக அரசு திகழும் – முதலமைச்சர்

Default Image

மக்கள் பணியாற்றுவது ஒன்றே திமுக அரசின் இலக்கு என்று தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்.

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மக்கள் பணியாற்றுவது ஒன்றே திமுக அரசின் இலக்கு. பேரிடர் காலத்தில் மக்களைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பதே அரசின் தலையாய கடமை. மழையிலும் வெயிலிலும் மக்களுக்குக் குடையாகக் கழக அரசு திகழும். எந்நாளும் மக்களுடனேயே இருப்போம்; மாநிலத்தைக் காப்போம்.

பருவமழை தொடங்குவதற்கு முன்பே வடிகால்களை சீரமைக்கும் பணிகளை அரசு நிர்வாகம் விரைவாக மேற்கொண்டதால், சென்னையில் அதி கனமழை பெய்த நிலையிலும், கடந்த 2015 ஆண்டு போல வெள்ள பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. நவ. 6ஆம் தேதி இரவில் விடிய விடிய சென்னையில் மழை பெய்த நிலையில், நவ.7 ஆம் தேதி காலை முதல் மாலை வரை பாதிப்புகளை ஆய்வு செய்ததாக கூறியுள்ளார்.

சென்னையிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் ஆய்வு பணிகளை மேற்கொள்ள சென்றபோது பொதுமக்கள் நேரில் வந்து தமது தேவைகளையும் குறைகளையும் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகள் குறித்து கவனத்துடன் ஆய்வுகளை மேற்கொண்டதன் தொடர்ச்சியாக, திருவாரூர் மாவட்டக்குட்டபட்ட பகுதிகளில் பாதிப்புக்குள்ளாகியிருந்த விவசாயிகளை சந்தித்து உரையாடியபோது நெற்பயிர் மட்டுமின்றி, கால்நடைகள், மண்சுவர் குடிசைகள் பாதிப்பு அடைத்திருப்பதையும், பயிர் காப்பீட்டின் மூலமாக நிவாரண பெறுவதில் உள்ள சிக்கலைகளையும் உள்ளவர்கள் தெரிவித்தாக கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட மழை பாதிப்புகள் குறித்த செய்திகள் மிகுந்த கவலையுடன் கவனித்த நிலையில், குமரி மாவட்ட மக்களின் துயர் துடைக்கும் கரமாக உங்களில் ஒருவனான எனது கரம் இருக்கும் என்ற உறுதியினை வழங்குவதாகவும் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் தொலைநோக்கு பார்வையுடனான மழைநீர் வடிகால் கட்டமைப்பை உருவாக்கி, நீர் ஆதாரங்களை பெருக்குவதே அரசின் தலையாய நோக்கமாகும்.

ஒவ்வொரு திட்டத்திலும் முந்தைய அதிமுக ஆட்சியாளர்கள் நடத்திய ஊழல்கள் களையப்படுத்துவதுடன், அவர்களின் மலின அரசியல் நோக்கத்திலான பொது கவனத்தை திசை திருப்பும் எண்ணத்துடன் வகைப்படும் விமர்சனங்களை புறம்தள்ளி மக்களுக்கான பணியில் நமது அரசு தொடர்ந்து சிறப்பாக செய்லபடும் என்று உடன்பிறப்புகளுக்கு முதல்வர் எழுதியுள்ள மடலில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்