அரசு பங்களாவை காலி செய்து புதிய வீட்டில் குடியேறினார் ஓபிஎஸ்.
அதிமுக அரசு 2011 முதல் 2021 வரை ஆட்சியில் இருந்தது. இதனை அடுத்து அதிமுக அமைச்சர்களுக்கு, அவர்கள் வசிப்பதற்காக அரசு பங்களா வழங்கப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இருவரும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பொதுப்பணி துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு பங்களாவில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், திமுக ஆட்சியை பிடித்துள்ள நிலையில் அரசு பங்களாவை அங்கிருந்தவர்கள் காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரசு பங்களாவிலேயே தங்குவதற்கு அனுமதி கோரிய நிலையில், அது ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசு பங்களாவில் தொடர்ந்து தங்குவதற்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அதேசமயம் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், அவரது தம்பி மறைவின் காரணமாக அந்த இல்லத்தை முழுமையாக காலி செய்ய அவகாசம் கேட்டிருந்தார். இந்த நிலையில் நல்ல நாளான இன்றைய நாளில் இன்றைய தினம் அரசு பங்களாவை காலி செய்து விட்டு, சென்னையில் உள்ள புது வீட்டுக்கு மாறியுள்ளார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வசித்து வந்த வீடு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…