இதுபோன்ற அவலங்கள் நடைபெறாமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – விஜயகாந்த்
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தீ விபத்து குறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்வீட்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு தீயை அணைத்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில், தீ விபத்து குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள், தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தீ விபத்து” தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதியின்மை,மருத்துவர்கள் பற்றாக்குறை,பிரசவத்திற்கு பணம் கேட்கும் பழக்கம் என பல்வேறு அவலங்கள் நடக்கிறது. இதுபோன்ற அவலங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
“ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தீ விபத்து”
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதியின்மை,மருத்துவர்கள் பற்றாக்குறை,பிரசவத்திற்கு பணம் கேட்கும் பழக்கம் என பல்வேறு அவலங்கள் நடக்கிறது. இதுபோன்ற அவலங்கள் நடைபெறாமல் தடுக்க @CMOTamilnadu உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் pic.twitter.com/prlZQUr6yN— Vijayakant (@iVijayakant) April 27, 2022