இனி ஒரு சம்பவம் இப்படி நடக்காதவாறு தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – டிடிவி தினகரன்
கன்னியாகுமரி மாவட்டத்திலும் அதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திலும் அரசு பேருந்துகளில் நிகழ்ந்திருக்கும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கின்றன.
கன்னியாகுமரி அரசு பேருந்தில் நாரி குறவர் இணைத்த சேர்ந்தவர்கள் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் மற்றும் விழுப்புரத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நடத்துனர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார்.
அந்த பதிவில், ‘கன்னியாகுமரி மாவட்டத்திலும் அதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திலும் அரசு பேருந்துகளில் நிகழ்ந்திருக்கும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கின்றன. பயணிகளிடம் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்தும், அவர்களுக்கு இருக்கிற சமூக பொறுப்பு குறித்தும் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்துவது பற்றி தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.
இனி ஒரு சம்பவம் இப்படி நடக்காதவாறு தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
இனி ஒரு சம்பவம் இப்படி நடக்காதவாறு தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். (3/3)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) December 10, 2021