கடந்த ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் பதிவிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு அரசுத் துறைகளில் தொடக்கநிலை பணியாளர்களை நியமிக்க முடியவில்லை. புதிய பணியிடங்களை ஏற்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பதும், 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதும் தான் இதற்குக் காரணம் ஆகும்.
கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக கடந்த 20.05.2020-இல் பிறப்பிக்கப்பட்டு, 24.10.2020-இல் திருத்தம் செய்யப்பட்ட நிதித்துறை அரசாணை எண் 382- இல் தான் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை இன்றைய சூழலுக்கு பொருந்தாதவை என தெரிவித்துள்ளார்.
கொரோனா நிலைமை சீரடைந்து பொருளாதாரம் வளர்ச்சியடையத் தொடங்கியுள்ள நிலையில், கடந்த ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். புதிய பணியிடங்களை உருவாக்கி, படித்து விட்டு காத்திருக்கும் இளைஞர்களுக்கு அரசு வேலைகளை வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…
சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். . வேளாண்…