‘நீட்’டில் கைவிட்டது போல் இல்லாமல் மாணவர்களை அரசு காக்க வேண்டும்- உதயநிதி
‘நீட்’டில் கைவிட்டது போல் இல்லாமல் மாணவர்களை அரசு காக்க வேண்டும் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருந்தார் தமிழக முதல்வர் பழனிசாமி. மேலும் அரியர்ஸ் எழுதுவதற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து முன்னாள் துணைவேந்தர் பாலகுமாரசாமி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அப்பொழுது அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளுக்கு புறம்பானது என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுமம் சென்னை உயர்நீதிமன்த்தில் தெரிவித்தது.
இந்நிலையில் இது குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,அரியர் மாணவர்களை தேர்ச்சியென அறிவித்த அடிமை அரசின் ஆணை விதிகளுக்கு எதிரானது என AICTE நீதிமன்றத்தில் கூறியுள்ளது. எடுபுடிகளின் விளம்பர வெறியால் அடுத்து என்னவென்று தெரியாத குழப்ப நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ‘நீட்’டில் கைவிட்டது போல் இல்லாமல் மாணவர்களை அரசு காக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அரியர் மாணவர்களை தேர்ச்சியென அறிவித்த அடிமை அரசின் ஆணை விதிகளுக்கு எதிரானது என AICTE நீதிமன்றத்தில் கூறியுள்ளது. எடுபுடிகளின் விளம்பர வெறியால் அடுத்து என்னவென்று தெரியாத குழப்ப நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ‘நீட்’டில் கைவிட்டது போல் இல்லாமல் மாணவர்களை அரசு காக்க வேண்டும் pic.twitter.com/6djM5zAoky
— Udhay (@Udhaystalin) September 30, 2020