கடந்த ஆட்சியை குற்றம் சொல்லி, அரசு பொறுப்பை தட்டி கழிக்க கூடாது. நிலைமையை சரி செய்வோம் என்று கூறி திமுக ஆட்சிக்கு வந்தது.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், பல மாவட்டங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கிய நிலையில், சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்களின் இயல்புவாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளானது.
குறிப்பாக சென்னையில் மழையால் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து, நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், வில்லிவாக்கத்தில் வெள்ளப்பாதிப்பை ஆய்வு செய்து, மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கடந்த ஆட்சியை குற்றம் சொல்லி, அரசு பொறுப்பை தட்டி கழிக்க கூடாது. நிலைமையை சரி செய்வோம் என்று கூறி திமுக ஆட்சிக்கு வந்தது. எனவே, திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…