ஊரடங்கு நிவாரண நிதி மற்றும் உணவுத்தொகுப்பு முழுமையாக சென்றடைவதைத் தமிழக அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்று தினகரன் தெரிவித்துள்ளார் .
கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.இதனால் சாமானியர்கள் வேலைக்கு செல்ல முடியமால் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் அறிவித்த படி ஊரடங்கு நிவாரண நிதி மற்றும் உணவுத்தொகுப்பு முழுமையாக சென்றடைவதைத் தமிழக அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். அதிலும் கூட நலவாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களில் ஏறத்தாழ பாதி பேருக்குத்தான் உணவுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கூறியிருப்பதாக வரும் செய்திகள் ஏற்புடையதல்ல.எனவே, வருமானமின்றி துயரத்தில் இருக்கும் அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் நிதியும், உணவுத்தொகுப்பும் உடனடியாக கிடைப்பதற்கு தமிழக அரசு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…