கிராம நிர்வாக அலுவலர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்..!விசிக தலைவர் திருமாவளவன்
கிராம நிர்வாக அலுவலர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில், கிராம நிர்வாக அலுவலர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலர்கல் இல்லாமல் பணிகளை மேற்கொள்ள முடியாது. தோல்வி அடைந்தே தீருவோம் என்ற முயற்சியோடு வேலை செய்தால் அதி வெற்றிகரமான தோல்வி. தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது பாஜகவுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கின்றனர் என்பது உறுதி.ஜனவரி 3-ஆம் தேதி விசிகவின் தேசம் காப்போம் மாநாடு திருச்சியில் நடைபெறும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.