உத்தரகாண்ட் மாநிலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைந்ததன் காரணமாக சமோலி மாவட்டத்தில் அலக்நந்தா மற்றும் தவுலிகங்கா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கில் சுமார் பத்து நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.இந்த துயரச் செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு மக்களின் சார்பிலும், தமிழ்நாடு அரசின் சார்பிலும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…