தமிழக அரசு இதைத் தவிர மற்ற அனைத்திலும் சூப்பர் – பிரேமலதா விஜயகாந்த்

கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் மீண்டு வரும் – தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.
தமிழகத்தில் பொதுமுடக்கம் முடியும் வரை தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறக்காமல் இருந்திருக்கலாம். மதுக்கடை திறப்பு தவிர, மற்ற அனைத்து பணிகளையும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும் திமுக ஆட்சியில் இருந்தால் இதை விட சிறப்பாக என்ன செய்துவிடப் போகிறார்கள்? என்று கேள்வி எழுப்பி அவர், அனைத்து மாவட்டங்களிலும் மக்களுக்கு தேவையான உதவிகளை தேமுதிக செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.