#Breaking:சுற்றுலா மேம்பாட்டு குழு அமைப்பு-தமிழக அரசு..!
தமிழ்நாட்டிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக,16 பேர் கொண்ட சுற்றுலா மேம்பாட்டு குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.அந்த வகையில்,கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்நிலையில்,தமிழ்நாட்டிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக,சுற்றலாத்துறை இயக்குநர் தலைமையில் 16 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அதன்படி,
- சுற்றுலா இயக்குநர் – தலைமை.
குழு உறுப்பினர்கள்:
- இயக்குநர், அருங்காட்சியகத் துறை ஆணையாளர்,
- கலை மற்றும் கலாச்சாரத் துறை ஆணையாளர்,
- இந்து மத மற்றும் தொண்டு ஆஸ்தித் துறை ஆணையாளர்,
- பொது சுகாதாரத் துறை இயக்குநர்,
- கமிஷனர், தொல்பொருள் துறை,
- பிராந்திய இயக்குநர்- சுற்றுலா அமைச்சகம், இந்திய அரசு, இந்திய சுற்றுலா, சென்னை,
- டாக்டர் பி. குகனந்தம், முன்னாள் நகர சுகாதார அதிகாரி, சென்னை கார்ப்பரேஷன், HOD – சமூக மருத்துவம் மற்றும் தொற்று,
- தமிழ்நாடு அந்தமான் & நிக்கோபார் மற்றும் புதுச்சேரி அத்தியாயம் இந்திய சுற்றுலா ஆபரேட்டர் சங்கம் (IATO) -தலைவர் உள்ளிட்ட மொத்தம் 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவானது,தமிழ்நாட்டிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவுள்ளது.