ராஜினாமா.! புதிய அரசு தலைமை வழக்கறிஞர் இவர் தான்.! ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை.!

Advocate Shanmugasundaram - Advocate PS Raman

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பொறுப்பில் இருந்த சண்முகசுந்தரம் இன்று காலை தனது பொறுப்பில் இருந்து விலகி கொள்வதாக தமிழக அரசுக்கு தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். இனி அரசு வழக்கறிஞராக அல்லாமல் தனிப்பட்ட முறையில் தனது வழக்கறிஞர் பணியினை தொடர உள்ளதாக ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

முரசொலி நிலம்: பட்டியலினத்தோர் ஆணையம் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு..!

1977இல் வழக்கறிஞராக தனது பணியினை தொடர்ந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ராஜீவ்காந்தி கொலை குறித்த விசாரணை கமிஷன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி வழக்கு என பல்வேறு முக்கிய வழக்குகளில் அரசு சார்பில் வாதாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு கூடுதல் வழக்கறிஞராக இருந்த சண்முகசுந்தரம் கடந்த 2021இல் திமுக அரசு பொறுப்பேற்றதும் அரசு தலைமை வழக்கறிஞராக பணியாற்ற துவங்கினார்.

தற்போது சண்முகசுந்த்ரம் ராஜினாமாவை தொடர்ந்து புதிய அரசு தலைமை வழக்கறிஞரை தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது. புதிய அரசு தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமனை தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியுள்ளது. ஆளுநர் ஒப்புதலுக்கு பின்னர் பி.எஸ்.ராமன் , தமிழக மாநில அரசின் தலைமை வழக்கறிஞராக தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்