மாநில சிறுபான்மையினர் ஆணையத்தை திருத்தியமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தில் தற்போது மத சிறுபான்மையினருக்கு மட்டுமே பிரதிநிதித்துவம் உள்ளது மற்றும் மொழிவழி சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் இல்லை. எனவே, மாநில சிறுபான்மையினர் ஆணையத்தில் மொழிவழி சிறுபான்மையினருக்கு சிறந்த பிரதிநிதித்துவம் வழங்க, அரசு கவனமாக பரிசீலித்தபின், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஒன்பது உறுப்பினர்களில் இருந்து பதின்மூன்று உறுப்பினர்களாக உயர்த்த அரசு முடிவு செய்தது.
இந்நிலையில்,மாநில சிறுபான்மையினர் ஆணையத்தை திருத்தியமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.மாநில சிறுபான்மை ஆணையத்தில் மொழி சிறுபான்மையினரும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி,ஆணையத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 9-ல் இருந்து 13 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக 9 பேர் மத சிறுபான்மையினராகவும்,4 பேர் மொழி சிறுபான்மையினராகவும் இடம் பெற்றுள்ளனர்.
மேலும்,மதம் மற்றும் மொழி பிரிவை சேர்ந்த தலா ஒருவர் ஆணையத்தின் துணைத்தலைவராக இருப்பார்.மொழி சிறுபான்மையினருக்கும் பிரதிநிதித்துவம் அளித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல,கீழ்கண்ட மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் நான்கு பேர் மொழியியல் சிறுபான்மையினராக குழுவில் இடம் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(1) தெலுங்கு,
(2) உருது,
(3) கன்னடம்,
(4) மலையாளம்,
(5) சௌராஷ்டிரா, மற்றும்
(6) மராத்தி.
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…
சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…