#Breaking:கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி – தமிழக அரசு அரசாணை வெளியீடு..!
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட ரூ.6000 கோடி நகைக்கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடி குறித்து ஒரு வாரத்தில் அரசாணை வெளியிடப்படும் என்றும் இதன் மூலமாக 11 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும் கடந்த வாரம் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,5 சவரனுக்கு உட்பட்டு ரூ.6000 கோடி நகைக்கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதன்படி,40 கிராமுக்கு குறைவான நகைக்கடன்கள் தள்ளுபடி,ஒரு குடும்பத்திற்கு 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால்,அரசுக்கு ஏற்படும் செலவு,பூர்வாங்க ,மதிப்பீடு,ஆய்வு அடிப்படையில் ரூ.6000 செலவாகும்.மேலும்,தள்ளுபடியின் அசல் தொகை, ஏப்ரல் 2021 முதல் அரசாணை பிறப்பிக்கப்படும் நாள் வரையிலான வட்டியை அரசே ஏற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,இதன் மூலம் 16 லட்சம் பேர் பயனடைவார்கள் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.