பெரும் புயல் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது… தமிழக அரசுக்கு மத்திய ஆய்வு குழு பாராட்டு.!
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு,திருவள்ளூர் ஆகிய மாவட்ட பகுதி மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். புறநகர் பகுதி மக்கள் இன்னும் புயல் பாதிப்பில் இருந்து மீளாமல் தவித்து வருகின்றனர். ஒரு சில பகுதிகளில் இன்னும் மழைநீர் தேங்கி நிற்கிறது.
மழைநீர் பாதிப்புகள், நிவாரண பணிகள் மேற்கொள்ள மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு 5060 கோடி ரூபாய் கேட்டிருந்தது. இதனை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை வந்து வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தார். உடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் , அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலர் சிவதாஸ் மீனா ஆகியோரும் மத்திய அமைச்சர் உடன் ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தனர்.
மிக்ஜாம் புயல் – தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதல்வர்..!
அதனை தொடர்ந்து மத்திய ஆய்வு குழு தமிழகத்திற்கு வந்து மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யும் என கூறப்பட்டு இருந்தது. அதன்படி, வடசென்னையில் ஒரு குழுவும், தென்சென்னை, மத்திய சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதியில் ஒரு குழுவும், திருவள்ளூர் பகுதிக்கு ஒரு குழுவும் ஆய்வு செய்து வந்தனர்.
இதில் தென் சென்னை, மத்திய சென்னை ஆய்வு செய்த மத்திய அரசு குழுவானது தமிழக அரசு வெள்ள பாதிப்பு சமயத்தில் சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்டது எனவும், 2015ஐ காட்டிலும் மழை வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்த முறை சிறப்பாக இருந்ததாகவும், அதானல் பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. பெரிய அளவிலான உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
அதனால் தான் சென்னை விமான நிலையம் மிக விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்பியது. மின்சாரம் வெகு விரைவாக வழங்கப்பட்டது. தொலைத் தொடர்புச் சேவை விரைவாகவே சீர் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மீண்டும் ஒருமுறை தமிழ்நாடு அரசினை மத்திய ஆய்வுக் குழு சார்பாக பாராட்டுகின்றேன். அதேநேரத்தில் தமிழ்நாடு அரசுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நாங்கள் உறுதுணையாக இருப்போம்
எங்கள் குழு கடந்த 3 நாட்களாக ஆய்வு மேற்கொண்டு வந்துள்ளோம். 6 அமைச்சகத்தில் இருந்து நாங்கள் வந்துள்ளோம் எங்கள் அறிக்கையை நாங்கள் விரைவில் மத்திய அரசிடம் சமர்பிப்போம் என மத்திய அரசின் ஆய்வு குழுவினர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.