அண்ணாமலையின் பகல் கனவு… தமிழகத்தில் இரு மொழி கொள்கை தான் ! அரசு திட்டவட்டம்.!
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் உலகம் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்பில் ஓர் ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு பயிற்சி அளிப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து குறிப்பிடுகையில், இந்தியாவிலேயே முதன் முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயிற்றுவிக்க தமிழகம் முயற்சி எடுத்துள்ளது என குறிப்பிட்டு இருந்தார்.
காமராஜரும் பிரதமர் மோடியும் ஒன்னா.? திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி
இது குறித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்திரபிரதேச அரசு செயற்கை நுண்ணறிவு குறித்த பாடத்தை அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு அறிவித்து இருப்பது பாராட்டுக்குரியது. மேலும், பிரதமரின் புதிய கல்வி கொள்கை படிப்படியாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. தாய் மொழியை அடிப்படையாக கொண்ட மும்மொழி கல்விக் கொள்கையும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து தமிழக அரசு தற்போது அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளது. அதில், தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. மற்ற மாநிலங்களில் இலக்குகள் என்று சொல்லப்பட்டிருக்கும் பலவற்றை தமிழ்நாடு ஏற்கனவே அடைந்து விட்டது. தொழில்நுட்பம் சார்ந்து தமிழகத்திற்கு யாரும் வகப்பெடுக்க தேவையில்லை.
மற்ற மாநிலங்களை விட தொழில்நுட்பத்தில் தமிழகம் முன்னோடியாக வளர்ந்து வருகிறது. பெரியார் காட்டிய பாதையில் தமிழக அரசு முற்போக்கான பாதையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அண்ணாமலை போன்றோர் பகல் கனவு போல மும்மொழிகல்விக் கொள்கையானது தமிழகத்தில் ஒருபோதும் உருவாக வாய்ப்பே இல்லை. தமிழகத்தில் இரு மொழிக்கொள்கையை தொடரும் என தமிழக அரசு செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.