முதலமைச்சர் பொதுநிவாரண நிதி… 399 கோடியே 93 இலட்சம்… தமிழக அரசு அறிவிப்பு…
கொரோனா வைரஸ் பெருந்தொற்று தடுப்பு பணிக்காக தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தற்போதுவரை 399 கோடியே 93 லட்சம் வந்துள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பெருந்தொற்றினை தடுக்க முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், அரசு சார் நிறுவன ஊழியர்கள், அரசு சார் வாரியங்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து 21.7.2020 அன்று வரை மொத்தம் 394 கோடியே 14 லட்சத்து 49 ஆயிரத்து 331 வந்துள்ளது என்றும், இதன் தொடர்ச்சியாக,22.7.2020 முதல் 7.10.2020 வரை
- தமிழ்நாடு வன தோட்ட கழகம் 11 கோடி,
- கல்ஸ் குருப் ஆப் கம்பெனிஸ்,
- சென்னை 1 கோடி, இன்ஸ்லன்ட் பேங்க் லிமிடெட் 95 லட்சம்,
- நீதித்துறை பணியாளர்கள் ஒரு நாள் ஊதியம் 49 லட்சத்து 56 ஆயிரத்து 851,
- இராம.ராமநாதன், சேர்மன், கும்பகோணம் மீயூட்சுவல் பெனிபிட் பண்ட் நிதி லிமிடெட்,
- கும்பகோணம் 25 லட்சம்,
- கலைஞர் நினைவு இண்டர்நேஷனல் வர்ச்சுவல் மாராத்தான் 2020 23 லட்சத்து 41 ஆயிரத்து 726,
- டெனோவா இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னை 1 லட்சம்
என 7.10.2020 முடிய முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பெறப்பட்ட மொத்த தொகை 399 கோடியே 93 லட்சத்து 3 ஆயிரத்து 366 ஆகும்.