சாலைகளை புதுப்பிக்க டெண்டர் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகள், ஊரகப்பகுதிகளில் உள்ள சாலைகளை புதுப்பிக்க தமிழக அரசு டெண்டர் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.ஆனால்,9 புதிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை.பின்னர், கொரோனா தொற்று,சட்டப்பேரவைத் தேர்தல் என அடுத்தடுத்த நிகழ்வுகளால் உள்ளாட்சித் தேர்தல் தாமதமானது.
இதனையடுத்து,கொரோனா கட்டுக்குள் வந்ததும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் உடன் மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலையும் சேர்த்து நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருந்த நிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில்,தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகள், ஊரகப்பகுதிகளில் உள்ள சாலைகளை புதுப்பிப்பதற்காக தமிழக அரசு டெண்டர் அறிவித்துள்ளது.