புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.26 கோடி நிதி ஒதுக்கீடு
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு வந்த நிவர் மற்றும் புரெவி புயல்களால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.குறிப்பாக டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கடும் சேதமடைந்தன.இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புள்ளாகினார்கள்.
இந்நிலையில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.16 கோடியும், மாநில நிதியாக ரூ.10 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.