மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டால் மத்திய அரசு பயந்து அணை கட்டுவதைத் தடுக்கும் …!வைகோ
மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டால் மத்திய அரசு பயந்து அணை கட்டுவதைத் தடுக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், மேகதாதுவில் அணை கட்டப்படுவதைத் தடுக்க மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டால் மத்திய அரசு பயந்து அணை கட்டுவதைத் தடுக்கும். மேகதாதுவுக்கு அனுமதிதரமாட்டோம் எனக்கூறிய மத்திய அரசு தற்போது ரகசிய ஒப்புதல் தந்துள்ளது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.