முன்னாள் அமைச்சர் திரு. இராஜேந்திரபாலாஜி அவர்களைக் கைது செய்வது குறித்து அறிக்கை வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, கழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தி, பொய் வழக்குகள் போடுவது தொடர்கதையாகி உள்ளது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான திரு. K.T. இராஜேந்திரபாலாஜி அவர்கள் அமைச்சராக இருந்தபொழுது, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணம் பெற்றதாக புகார்கள் வந்துள்ளதாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில், அந்த புகாருக்கு எந்தவிதமான நேரடி முகாந்திரமும் இல்லாத நிலையில், முன்னாள் அமைச்சரை இவ்வழக்கில் இணைத்து அவரை கைது செய்யத் துடிக்கிறது இந்த விடியா அரசு.
உச்சநீதிமன்றத்தில் அவர் பிணை கோரும் வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில், ஆளும் திமுசு அரசு தன்வசமுள்ள காவல் துறையின் மூலம், திரு. இராஜேந்திரபாலாஜி அவர்களின் குடும்ப உறுப்பினர்களான திரு. வசந்தகுமார், திரு. ரமணா மற்றும் வாகன ஓட்டுநர் திரு. ராஜ்குமார் ஆகிய மூவரையும், எந்தவித புகாரும் இல்லாத நிலையில், அமைச்சரின் உறவினர்கள், தெரிந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, சட்டத்திற்குப் புறம்பாக அடைத்து வைத்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.
இதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, காவல் துறையினரின் இந்த சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்ததோடு, இந்த வழக்கிற்காக அமைச்சர் திரு. ராஜேந்திரபாலாஜியின் உறவினர்கள் யாரையும் சட்டத்திற்கு முரணாக தொந்தரவு செய்யக்கூடாது என்றும், உடனடியாக மூவரையும் விடுவிக்க வேண்டும் என்றும், மேலும் மதுரை மாவட்ட குற்றப் பிரிவு ஆய்வாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் திரு. இராஜேந்திரபாலாஜி அவர்கள், தனக்குள்ள சட்ட உரிமையின்படி (Legal Right) புனையப்பட்ட இந்த வழக்கில், தனக்கு பிணை வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில், இந்த விடியா அரசின் காவல்துறை முன்னாள் அமைச்சர் திரு. இராஜேந்திரபாலாஜி அவர்களைக் கைது செய்யத் துடிப்பதையும்; உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் கடும் கண்டனத்திற்கு பிறகும், அவரது உறவினர்களை தொந்தரவு செய்வதையும், கடுமையாக கண்டிக்கின்றேன்.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 27ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்,…
ராவல்பிண்டி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும்…
சென்னை : ஓ மை கடவுளே பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் 'டிராகன்' வெளியானதிலிருந்து,…
சென்னை : ஆண்டுதோறும் சிவராத்திரி விழாவானது கோவை ஈஷா யோகா மையம் சார்பாக வெள்ளையங்கிரி மலை அடிவாரத்தில் ஆதியோகி சிலை…
துபாய் : இந்தியா இன்னும் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்திருந்தால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை சீக்கிரம் முடித்திருக்க முடியும் என்று ஸ்ரேயாஸ்…