அரசு மெத்தனப்போக்கிலே இருக்கிறது- ஈபிஎஸ் பேட்டி.

EPS Interview

ஈபிஎஸ்: தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று தொடங்கிய நிலையில், நேற்றைய தினம் போல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பேரவைக்கு வந்தனர். அங்கு கேள்வி நேரம் முடிந்தும் நேற்றை போல, இன்றும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் பின் தங்களுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது என கூறி அதிமுகவினர் முழக்கமிட்டு கொண்டே பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதன் பின் பத்திரிகையாளரை சந்தித்து அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி பேசி இருந்தார்.

அவர் பேசுகையில், ” சட்டமன்ற பேரவையில் பேசுவதற்கு சபாநாயகர் இன்று தினமும் மறுத்துவிட்டார்கள். எங்களை பேரவையில் பேச அனுமதிக்கவில்லை. இந்த விவகாரத்தில் இதுவரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள், எத்தனை பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்ற நிலை குறித்து கேள்வி எழுப்பினோம்.

கள்ளக்குறிச்சி மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இன்று சட்டப்பேரவையில் பேச வேண்டும் என அனுமதி கேட்டும், அதனை சபாநாயகர் மறுத்துவிட்டார். எங்களுக்கு கிடைத்த தகவலின்படி மொத்தம் 183 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் 55 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிகின்றன.

இந்த நிலையிலும் அரசு மெத்தனப்போக்கிலே செயல்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தினந்தோறும் மக்களின் உயிர் பறிபோகிறது, இதில் அரசின் செயல்பாடு என்ன?. அரசு இதனை சரியாக கையாண்டிருந்தால் பறிபோன உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்.

மேலும், நான் சொன்ன மருந்து வேறு, அமைச்சர் மா.சுப்ரமணியம் கூறிய மருந்து வேறு. நான் கூறிய மருந்து மருத்துவமனையில் இல்லை. முதலில் இறந்தவர்கள் இதனால் தான் இறந்தார்கள் என்று உண்மையை சொல்லி இருந்தால் காப்பற்றி இருக்கலாம்.

இதை அரசாங்கம் அமைத்த  ஒரு நபர் ஆணையம் விசாரித்தால் உண்மை வெளிவராது, பாதிப்படைந்த கள்ளக்குறிச்சி மக்களுக்கு நியாயம் வேண்டுமென்றால் சிபிசிஐடி விசாரணை வேண்டும். ஏழை மக்களுக்கு நீதி வேண்டும்” பத்திரிகையாளர் சந்திப்பில் பேசி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்