சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த அரசு முயன்றுள்ளது – மு.க.ஸ்டாலின்

Default Image

மறைமுகத் தேர்தல் முறை மூலம் சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த அரசு முயன்றுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை பிறப்பித்தது தமிழக அரசு.இதேபோல் நகர்மன்ற, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கும் மறைமுக தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், மறைமுகத் தேர்தல் முறை மூலம் சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த அரசு முயன்றுள்ளது. திமுக ஆட்சியில் அப்போதைய சூழலுக்கு ஏற்ப மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டது. உள்ளாட்சியில் உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாததால் மறைமுக தேர்தல் முறை மாற்றப்பட்டது என்று  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்