200 மி.லி.கிருமி நாசினி விலை ரூ.100 உச்ச வரம்பு நிர்ணயித்தது மத்திய அரசு!
விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக 200 மி.லி.கிருமி நாசினியை ரூ.100கும் மேல் விற்க கூடாது, என மத்திய அரசு உச்ச வரம்பு நிர்ணயித்துள்ளது.கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவி வரும் நிலையில் கைகழுவும் கிருமி நாசினி திரவம்,மாஸ்க் ஆகியவற்றை தேவை அதிகரித்துள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி வியாபாரிகள் இதை அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது. இதனை அடுத்து இவற்றின் விலையைக் கட்டுப்படுத்தவும், பதுக்களை தடுக்கவும் அத்தியாவசிய பொருட்களை பட்டியலிட்டு சேர்ப்பதாக மத்திய அரசு இந்த மாதம் தொடக்கத்தில் அறிவித்தது.
இந்நிலையில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கிருமி நாசினி திரவம் மற்றும் முக கவசங்களுக்கான மூலப்பொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த விலை உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் படி 200மி.லி கிருமி நாசினியின் அதிகபட்ச விலை ரூ.100 , 2 அடுக்கு முக கவசத்தின் விலை ரூ.8 ஆகவும் 3 அடுக்கு முக கவசத்தின் விலை ரூ.10 ஆகவும் நிர்ணயிக்கபடுகிறது.வரும் ஜூன் 30-ம் தேதி வரை விலை உச்ச அமலில் இருக்கும் என குறிப்பிடத்தக்கது.