அம்மா உணவகங்களை மூடும் எண்ணம் இல்லை.! அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்.!
அம்மா உணவகத்தை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. – சட்டப்பேரவையில் நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு பேச்சு.
அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட அம்மா உணவகம் தற்போது ஆட்சி மற்றம் நிகழ்ந்த பிறகும் கூட செயல்பட்டு வருகிறது. இந்த அம்மா உணவகம் பற்றி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் குற்றம் சாட்டினார்.
இபிஎஸ் குற்றசாட்டு :
அம்மா உணவகத்தில் உணவின் தரம் சரியாக இல்லை என தினந்தோறும் குற்றசாட்டு எழுந்து வருகிறது. என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு பேசினார்.
முதல்வர் விளக்கம் :
இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், எந்த அம்மா உணவகத்தில் உணவின் தரம் சரியில்லை என்று புகார் அளிக்கப்பட்டால் அது உடனடியாக சரி செய்யப்படும் எனவும், வீணாக ஒருசிலர் தான் அம்மா உணவக தரம் பற்றி தவறான செய்திகளை பரப்புகிறார்கள் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அம்மா உணவகம் :
முன்னதாக சட்டப்பேரவையில் பேசிய நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், படிப்படியாக அம்மா உணவகத்தை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும், இன்னும் ஒரு இடத்தில் கூட அம்மா உணவகம் மூடப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.